NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

வவுனியா, ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் நேற்று (22) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து ஓமந்தையில் வெதுப்பகம் நடத்தி வரும் ஒருவரே வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பஸ்சை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் ஏற்பட்டுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற சி.தினேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles