NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியாவில் மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர் – விசாரணை ஆரம்பம்

வவுனியாவில் 10ஆம் தர மாணவனை ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் தரம்10 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அண்மையில் காதில் அறைந்து தாக்கியதில் மாணவனின் செவியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவனை குறித்த ஆசிரியர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பாடசாலை அதிபர் சம்பவம் தொடர்பாக வலயக்கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Share:

Related Articles