NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வவுனியாவில் விவசாயிகளிற்கு பசளை வழங்கி வைப்பு..!

வவுனியா கோவில்குளம் கமநல சேவை பகுதிக்குட்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எம்ஓபி பசளை விநியோக நடவடிக்கை இன்று இடம்பெற்றது.

குறித்த உர விநியோகம் கோவில்குளம் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர்  காஞ்சனா தலைமையில் இடம்பெற்றிருந்தது.

6207 ஏக்கர் பெரும்போக நெற்பயிர்ச்செய்கைக்காக 3722 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

குறித்த உரமானது நீர்ப்பாசனத்துக்கு ஒரு ஏக்கருக்கு 12 கிலோவும் மானாவரிக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோவும் வழங்கி வைக்கப்பட்டன.

Share:

Related Articles