NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன இறக்குமதி கட்டுப்பாட்டுத் தளர்வு அரச வருமானத்தை அதிகரிக்கும் – IMF

வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளின் உத்தேச தளர்வு 2025ஆம் ஆண்டின் வருவாய் திரட்டலை ஆதரிக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பிரதானி பீட்டர் ப்ரூயர் தலைமையிலான குழு கடந்த 25ஆம் திகதி முதல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அவதானம் செலுத்தியிருந்தது.

தங்களது அவதானம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் பிரதானி பீட்டர் ப்ரூயர் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் பாராட்டத்தக்க விளைவுகளைக் காட்டியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles