NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடும் மழையின் போது வீதிகளின் நிலையைப் புரிந்து கொண்டு வாகனங்களை செலுத்துமாறு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக நெடுஞ்சாலைகள் மற்றும் மலைப்பாதைகளில் வாகனம் ஓட்டும் போது சாரதிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது வாகனத்தின் பிரேக்கிங் அமைப்பின் முறையான செயற்பாடுகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் மலைப்பாதைகளில் வாகனங்களை செலுத்தும்போது அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share:

Related Articles