NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தினசரி 3 மில்லியன் லீற்றர் நீர் ஆவியாகும் அவலம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் நிலவும் கடும் வறட்சிகாலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தினசரி 3 மில்லியன் லீற்றர் நீர் ஆவியாகி விடுவதாக அதன் பிரதம பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நிரம்பிய நீரின் அளவிலிருந்து மேற்பரப்பில் உள்ள சுமார் 2 மில்லிமீற்றர் நீர் ஆவியாகிய நிலையில் தற்போது அது 2 மடங்கு அதிகமாக ஆவியாகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி, பிரான்ஸ், கொரியா, சீனா போன்ற நாடுகள் ஆவியாகும் நீரின் அளவைக் குறைக்க தண்ணீரில் மிதக்கும் சூரிய தகடுகளை நிறுவ நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் அவர்களால் கூடுதல் மின்சாரம் தயாரிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவNளை, விக்டோரியா நீர்த்தேக்கத்தில் தற்போது 11 சதுர கிலோமீற்றர் நீர் மட்டுமே மீதம் உள்ளதாகவும், 13 சதுர கிலோமீற்றர் நீர் வற்றிவிட்டதாகவும் தலைமைப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

விக்டோரியா நீர்த்தேக்கம் 24 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles