H-1B, L-1, EB-5 மற்றும் குடியேற்றம் அல்லாத ஏனைய விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணங்களை அதிகரித்துள்ளதாக அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த கட்டண அதிகரிப்பிற்கு அமைய வெளிநாடுகளின் தொழில்நுட்ப நிபுணர்களால் பயன்படுத்தப்படும் H-1B விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 780 டொலராக அதிகரித்துள்ளது. H-1B பதிவுக் கட்டணமும் 10 அமெரிக்க டொலர்களில் இருந்து 215 டொலர்களாக உயரும்.
பதிவுக் கட்டண உயர்வவான அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அத்துடன் L-1 விசா கட்டணம் 460 டொலரில் இருந்து 1,385 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
EB-5 வகை விசா கட்டணமும் 3, 675 டொலரில் இருந்து 11,160 டொலராகவும் உயர்த்தப்படும் என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல்முறையாக அதிகரிக்கப்பட்டுள்ள விசா கட்டண உயர்வு எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.