NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விண்வெளியில் இருந்து பூமிக்கு கிடைத்துள்ள மர்மமான சமிக்ஞை!

விண்வெளியில் இருந்து பூமிக்கு மர்மமான சமிக்ஞை கிடைத்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

தோராயமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உருவான இந்த சிக்னல், நாசாவின் புதிய விண்கலமான “சைக்கிலிருந்து” வந்துள்ளது.

2023 இல், நாசா ஒரு விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது. ஒரு விண்கலத்தை ‘சைக் 16’ என்ற சிறுகோள் நோக்கி அனுப்பியது.

இது முதன்மையாக உலோகத்தால் ஆனது என்பதுடன் நமது சூரிய குடும்பத்தில் அரிதானது. இந்த சிறுகோள் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கு இடையே உள்ள சிறுகோள் பெல்ட்டில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சைக் டீப் ஸ்பேஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் (டிஎஸ்ஓசி) அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.  இது விண்வெளியில் பரந்த தொலைவில் லேசர் தகவல்தொடர்புகளை சாத்தியமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சைக் முதன்மையாக ரேடியோ அலைவரிசை தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தினாலும், ஆப்டிகல் கம்யூனிகேஷன்ஸ் தொழில்நுட்பம் அதன் திறனை நிரூபித்துள்ளது.

அதாவது குறிப்பிடத்தக்க சாதனையாக, லேசர் தகவல்தொடர்பு டெமோ வெற்றிகரமாக 140 மில்லியன் மைல்களுக்கு அப்பால் இருந்து பொறியியல் தரவை அனுப்பியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles