NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விமானத்தில் உயிரிழந்த பயணி – சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் ஒப்படைப்பு!


(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று (27) இரவு 10.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

மெல்போர்னில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், பயணிக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் விமானத்தில் உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles