NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

வியட்நாமில் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இலங்கையர்கள் மீள இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 19 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட 15 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளடங்குவதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிக்கும் தமிழ் பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குடிவரவு குடியகல்வு திணைக்களம் உள்ளிட்ட உரிய தரப்பினர் இவர்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற Lady R Three என்ற வியட்நாம் நாட்டுக் கொடியுடன் கூடிய மீன்பிடிக் கப்பல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் திகதி வியட்நாம் கடலில் விபத்துக்குள்ளானது.

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் அறிவிப்பின் பேரில் ஹீலியோஸ் லீடர் என்ற வணிகக் கப்பலால் இந்தக் குழுவினர் மீட்கப்பட்டு வியட்நாமின் தேடல் மற்றும் மீட்புக் கப்பலிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

பத்திரமாக மீட்கப்பட்ட அவர்கள், வியட்நாமில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

அந்தக் குழுவில் 23 பெர்கடந்த 19ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 151 பேர் கடந்த டிசம்பர் மாதம் அனுப்பப்பட்டனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles