(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாத அனைத்து கடைகளுக்கும் எதிராக கடுமையான சட்ட நடடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்று (23) தம்புள்ளை பிரதேசத்தில் இடம்பெற்ற விலைக் காட்சி தொடர்பில் ஆராயும் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மொத்த விற்பனை கடைகள், சில்லறை கடைகள், உணவகங்கள் மற்றும் அனைத்து நுகர்பொருள் விற்பனை செய்யும் இடங்களிலும் இந்த விலைக் காட்சிச் சட்டத்தை அமுல்படுத்துவது கட்டாயம் என்று கூறிய அவர், விலை காட்சிப்படுத்தப்படாத கடைகளில் பொருட்களை வாங்க மறுக்குமாறு அனைத்து நுகர்வோரையும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.
இந்த சட்டத்தை அமுல்படுத்தாத கடைக்காரர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்இ நுகர்வோர் அதிகாரசபையின் விவகாரங்களில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என கடையொன்றிற்கு வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் பணிப்பாளரிடம் கடுமையாகத் தெரிவித்தpருந்தார்.
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை வழங்கப்பட்ட போதும் அந்த விலையில் முட்டை கிடைக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு, பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.