NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழப்பு!

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி கடுவலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர், மறுநாள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

அதேநேரம், துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்றுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரும் புத்தளம் சிறைச்சாலையில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் கருவலகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles