NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிகாரங்களை குறைக்க இடமளிக்க முடியாது’ – சஜித்

 இந்நாடு சர்வாதிகாரியொருவராலோ அல்லது ஏகாத்திபத்தியொருவராலோ அல்லது மன்னராலோ ஆளப்படுவதில்லை என்றும், சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய 3 தூண்களின் அடிப்படையில் தடைகள் மற்றும் சமநிலைகள் மூலம் இயங்கினாலும், விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிகாரங்களை குறைக்கும் அமைச்சரவை தீர்மானத்தின் ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சரின் சட்ட அதிகாரங்கள் சீர்குலைக்கப்படுவதாக  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மனசாட்சியுடன் கிரிக்கெட் தொடர்பாக சில முடிவுகளை எடுத்தார் என்றும், இவ்வாறானதொரு பின்னணியில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக அரசாங்கம் தற்போது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றது என்றும், இவ்வாறான சேறு பூசும் பிரசாரங்களை மேற்கள்ளாமல் அவர்கள் உண்மையில் கிரிக்கட்டை நேசிப்பவர்களாக இருந்தால் கிரிக்கெட் தொடர்பில் உள்ளக கணக்காய்வை நடத்துமாறும் அவர் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இன்று (27) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 32 மற்றும் 33 ஆவது பிரிவின் ஊடாக இடைக்காலக் குழுக்களையும் திறமையான அதிகாரிகளையும் நியமிக்க விளையாட்டுத் துறை அமைச்சருக்கு அதிகாரம் இருந்தாலும், 2023 நவம்பர் 22 ஆம் திகதி அமைச்சரவை எடுத்த முடிவுகளின் மூலம் குறித்த அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், அன்றிலிருந்து இவ்வாறான இடைக்கால குழுக்களை நியமிக்கும் பட்சத்தில் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சருக்கு விளையாட்டுச் சட்டத்தின் மூலம் கிடைத்த அதிகாரத்தின் பிரகாரம், முடிவெடுத்து தனது அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்படும் திறன் இருந்தாலும், இது போன்ற அமைச்சரவை முடிவுகள் மூலம் செல்வாக்கு செலுத்தப்படுவதாகவும், இந்த அமைச்சரவைத் தீர்மானத்தைப் பார்க்கும்போது இது நல்லெண்ணத்தில் அமுல்படுத்தப்பட்ட செயற்பாடு அல்லாது மோசமான யோசனையுடன் செயற்படுத்தப்பட்ட செயலாகும் என்று தோன்றுகிறது.

சட்டத்தின் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சருக்குள்ள அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த அமைச்சரவையால் முடியுமா என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,

சட்டத்தை திருத்தும் ஏற்பாடுகள் இருந்தாலும் தேவையற்ற செல்வாக்குகளை பிரயோகிக்க அமைச்சரவைக்கு முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தை மாற்றி, சட்டரீதியாகவும் விளையாட்டுத் துறை அமைச்சரின் உரிமைகள் குறைக்கப்படுவதை தான் எதிர்ப்பதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிகாரங்களை இவ்வாறு குறைக்க இடமளிக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles