NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீடு வாங்கினால் மனைவி இலவசம் -விளம்பரத்தால் அதிர்ச்சியான சீன மக்கள்…!

வீடு வாங்கினால் மனைவி இலவசம் என சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களைக் கவர நினைத்த நிலையில், அது வாடிக்கையாளர்களை மட்டுமல்ல, அரசையும் கலக்கமடையச் செய்துள்ளது.

தற்போதைய நவீன யுகத்தில் விளம்பரம் இல்லாவிட்டால் எந்த பொருளையும் மக்கள் மதிப்பதில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

உலகிம் முழுவதும் உள்ள மக்கள் பொருட்கள் அல்லது நிலம் மற்றும் வீடுகளை விற்பனை செய்ய விளம்பரங்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

அதனால், விளம்பரங்களில் இலவச சலுகைகளை அறிவித்து, அதன்மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து நிறுவனங்கள் பயன்பெறுகின்றன.

அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று மக்களை கவர போட்ட விளப்பரம் அபராதக் கட்டும் அளவுக்கு சென்றுள்ளது.

சீனாவின் டிரையஜின் (Tianjin) என்ற நகரைச் சேர்ந்த மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, ‘தங்களிடம் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாகப் பெறுங்கள்’ என்று விளம்பரம் கொடுத்துள்ளது.

இந்த விளம்பரம் வைரலான நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் என நினைத்த அந்த நிறுவனத்திற்கு எதிராக எதிர்ப்புகள்தான் வந்துள்ளன. விளம்பரத்தை பார்த்த மக்கள், ’வீடு வாங்கினால் மனைவி இலவசமா’ என கோபமடைந்தனர்.இதனால் விளம்பரத்தைக் கொடுத்த நிறுவனத்தின்மீது, சீன அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.

எனினும், அந்த ரியல் நிறுவனம் ’இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை’ எனத் தெரிவித்துள்ளது. அதாவது, ’தங்கள் முயற்சியில் வீடு வாங்கி… உங்கள் மனைவிக்குக் கொடுங்கள்’ என்ற அர்த்தத்தில்தான் அந்த விளம்பரத்தைக் கொடுத்தோம் என கூறியுள்ளதாம்.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles