NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வீதி விதிகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை…!

வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வாகனம் செலுத்துவதற்கு முன்னர் சாரதியின் உடல் நலம் மற்றும் மனநிலை ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வெயங்கொடையில் உள்ள தனியார் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது, அதனை பார்வையிடுவதற்காக வந்த போதே இராஜாங்க அமைச்சர் இதனை தொிவித்துள்ளாா்.

மேலும் கருத்து தொிவிக்கையில்,“வீதி விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மேலும், தண்டனையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிதித்துள்ளார் .

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles