சீனாவில் உள்ள பூங்காவில் அமெரிக்கர்கள் நால்வர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தாக்குதல் சம்பவமானது வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள பொது பூங்காவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அயோவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு அமெரிக்க கல்வியாளர்களை பீஷன் பூங்காவில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்ற வேளை சந்தேகநபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியதாக பாதிக்கப்பட்டவர் ஒருவரின் சகோதரர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிகாரிகள் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவி மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும், இந்த சம்பவம் குறித்து சீன அதிகாரிகளால் மற்றும் ஊடகங்களினால் எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.