சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் இருபத்தி ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியில் கொண்டு வரப்பட்ட நபரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளது.
கொழும்பு-13 பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய வர்த்தகர் ஒருவர் இந்தியாவின் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் இன்று 15ம் திகதி காலை வரை விமான நிலைய வர்த்தக வளாகத்தில் தங்கியிருந்து விமான நிலையத்தை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொண்டு வந்த பொதிக்குள் 21,000 சிகரெட்டுகள் அடங்கிய 105 அட்டைப்பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.