NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘வேலுண்டு வினையில்லை’ – இன்று இந்துக்களின் தைப்பூசத்திருநாள்!

தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் நிறை மதியுடன் கூடிய சுப தினத்தில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

“வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயம் இல்லை” என்ற கூற்றுக்கு இனங்க, அப்பன் முருகப் பெருமானின் பெருமைகளை எடுத்துரைக்கும் தைப்பூச திருவிழா உலகம் எங்கும் கொண்டாடுவதற்கு ஒரே காரணம் முருகப்பெருமானின் அருளை பெற்று வாழ்வில் வெற்றி பெறுவதே.

தமிழர்களுக்கே உரித்தான ஒரு விழா. 

தை மாதத்தில் பௌர்ணமியும் பூசநட்சத்திரமும் இணைந்து வரும் நாள் தான் தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நாள்  சிவனுக்கும், முருகனுக்கும் விசேசமான ஒரு நாள். அப்பரும் ஞானசம்பந்தரும் தைப்பூசத்திருநாளை வெகு சிறப்பாகத் தங்கள் பதிகங்களில் பாடியுள்ளார்கள்.

இன்றைய நாளுக்கான பலன்கள்

மேஷம்

தைப்பூசத்தன்று நீங்கள் முருகனுக்கு ஒரு வேளையாவது விரதம் இருந்து, மனம் உருகி பிரார்த்தனை செய்தால் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் முருகன் நீக்குவார். இன்றைய தினம் வீட்டில் அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருகன் கோவிலுக்கு சென்று முருகனை மனம் உருகி வழிபட வேண்டும்.

ரிஷபம்

தைப்பூசத்தில் விரதம் இருந்து முருகனை நோக்கி வழிபட்டால் நினைத்த காரியம் யாவும் நடைபெறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

உங்களுடைய ராசிக்கு மூன்றாவது அதிபதியான கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்கும் போது உங்களுக்கு வெற்றியை தருவார். தைப்பூசத்தன்று கந்த சஷ்டி கவசத்தை நீங்கள் படித்து வந்தால் சங்கடங்கள் தீர்ப்பான் முருகன்.

மிதுனம்

உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடமான கடக ராசியில் சந்திரன் பிரயாணம் செய்யும் போது நீங்கள் முருகனை மனம் உருகி பிரார்த்தித்தால் உங்களுடைய நோய், கடன் தீரும்.

வீட்டில் சுபிட்சம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை அடையும். வாழ்வில் நல்லதே நடக்கும்.

கடகம்

கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசியிலேயே பூச நட்சத்திரத்தில் சந்திரன் பிரயாணம் செய்யும் பொழுது உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் உங்கள் வாழ்க்கையில் தீர்க்க முடியாத கஷ்டங்கள் யாவும் தீரும்.

தைப்பூச தினத்தன்று முருகப்பெருமானை நோக்கி வழிபட்டு வர சங்கடங்கள் விலகி சந்தோஷம் பெருகும்.

சிம்மம்

இது நாள் வரையில் கையில் இருந்த பணம் கரைந்து கொண்டே சென்றது என்றால், தைப்பூசத்தில் முருகனை வணங்கினால் கரைந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப ஒற்றுமை பிறக்கும். வாழ்க்கை சுபிட்சமாகும்.

கன்னி

முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து மாலையில் கோவில் சென்று முருகனை வழிபட்டு வர தடைபட்ட யாவும் விளகி, வாழ்க்கை ஒளிமயமாகும்.

துலாம்

விரதமிருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வர உங்களுடைய பிரச்சினைகள் தீர்வது மட்டுமல்லாமல், கடன் தீரும். வம்பு வழக்கில் சாதகமான பலன்கள் வந்து சேரும் உங்களுடைய தொழில் ஸ்தானத்தில் சந்திரன் பிரயாணம் செய்வதால் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கை வண்ணமயமாகும்.

விருச்சிகம்

நீங்கள் எதிர்நோக்கி இருந்த காரியங்கள் மட்டுமல்லாமல் உங்களுக்கு பாக்கியமாக கிடைக்கக்கூடிய அனைத்து காரியங்களும் உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.

வாழ்க்கையில் நீங்கள் செய்த சின்ன சின்ன கர்மாக்கள் கூட தொலைந்து நன்மை உண்டாகும். முருகன் கோவிலுக்கு சென்று உங்கள் குடும்பத்தின் பெயருக்கு அர்ச்சனை செய்து வர குடும்ப தோஷம் விலகும்.

தனுசு

விரதம் இருந்து இன்று முருகனை நோக்கி மனதார தவம் செய்தால், புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபேறு ஏற்படும். திருமண பாக்கியம் கைகூடும். அனைத்து சுப காரியம் நிகழ்வுகளும் உங்களுக்கு நடைபெறும். முருகப்பெருமானுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கட்டும்.

மகரம்

முருகனை நோக்கி விரதமிருந்து பக்தியுடன் வேண்டினால் நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண காரியங்கள் கைகூடி வரும். வேலை ஸ்தலத்தில் உங்களுக்கு பெயர் புகழ் கிடைக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். உங்களுக்கு இதனால் வரையில் இருந்து வந்த வம்பு வழக்குகள் விலகி புத்துணர்வு பெறுவீர்கள். இழந்த ஆரோக்கியத்தையும் மீண்டும் பெறுவீர்கள்.

கும்பம்

முருகனை மனமுறுகி வேண்டி நாள், மலையளவு கடன் இருந்தாலும் கடுகளவு குறைத்து போகும். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். வாழ்க்கையில் எல்லா வளமும் நலமும் உங்களுக்கு கிடைக்கும். முருகப்பெருமானை நோக்கி பக்தியுடன் வணங்குங்கள்.

மீனம்

விரதம் இருந்து இன்று முருகளை வழிப்பட இன்னல்கள் யாவும் விலகும். எதிரிகள் அழிவார்கள். நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

நீண்ட நாட்களாக நீங்கள் காத்திருக்கும் ஒரு விஷயம் கை கூடி வரும். ஐந்தாம் பாவகம் உங்களுடைய எண்ணத்தையும் வெற்றியையும் உறுதி செய்யக்கூடிய இடம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles