NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேலையற்ற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்தத் திட்டம்!

இலங்கையின் கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு ஆடு வளர்ப்பை அறிமுகப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள வேலையற்ற இளைஞர்கள் மற்றும் ஆடு வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு 70,000 ஆடுகள் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது ஆடு வளர்ப்பு பாரியளவில் நடைபெறாதமையின் காரணமாக, ஆட்டு இறைச்சி மற்றும் ஆட்டுப்பால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், ஆட்டின் தோல் மற்றும் ஆட்டு உரம் உற்பத்தி செய்வதன் மூலம் அதிக வருமானம் பெற முடியும் என்றார்.

இதன்மூலம் விவசாய அமைச்சு 100 கோடி ரூபாயை ஒதுக்க தீர்மானித்திருந்த நிலையில், கூடுதல் வருமான ஆதாரங்களைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆடு வளர்ப்புத் திட்டத்திற்கு 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles