NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அனைவரும் திரும்பி வருவதில்லை’ – சுகாதார அமைச்சர்

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

100,000 பேர் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு சென்றால் அவர்கள் அனைவரும் குணமடையமாட்டார்கள். இதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் பிரேதங்களை வைக்கும் மலர்சாலைகள் அமைக்கப்படுவதாக என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அது உண்மை என்பதுடன், யாரேனும் சுகாதார அமைச்சர் பதவி பெற நினைத்தால் அது வேறு கதை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 20 வருடங்கள் ஆகிறது எனவும், தடுப்பூசி போடப்பட்ட மேலும் 12 குழந்தைகளும் அப்போது சிறுமி இருந்த வார்டில் இருந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

Share:

Related Articles