ஹம்பாந்தோட்டை – ஆரபொக்க பகுதியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மாணவர் உயிரிழந்துள்ளதுடன், தாக்கிய மாணவர் குறித்த பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.