NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 5 அதிநவீன விமானங்கள் நீண்டகாலமாக பயன்பாட்டில் இல்லை!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 5 அதிநவீன விமானங்கள் பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் டெர்மினல்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் 24 ஏர்பஸ் விமானங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் 12 A330-200 மற்றும் A330-300 வரிசை விமானங்கள் நீண்ட தூர விமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய 12 விமானங்களும் A320, A321, A320NEO, A321NEO வகையைச் சேர்ந்தவை, அவை குறுகிய தூர விமான சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் தற்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் 5 விமானங்களுக்கு எஞ்சின் மற்றும் உதிரி பாகங்கள் இல்லாதமையால் பல மாதங்களாக விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த பயன்படுத்தப்படாத விமானங்களில் பெரும்பாலானவை சமீபத்திய A320 NEO மற்றும் A321 NEO விமானங்கள் ஆகும், அவை 2017க்குப் பிறகு விமான நிறுவனத்தில் சேர்ந்தன. அதற்கமைய, 150 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய A320 NEO விமானங்கள் 2 மட்டுமே உள்ளன.

4R-ANA மற்றும் 4R-ANB ஆகிய இரண்டு விமானங்களும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும், A321 NEO வகையைச் சேர்ந்த 4 விமானங்கள் விமான நிறுவனத்திடம் உள்ளன, அவற்றில் 3 விமானங்கள் உதிரி பாகங்கள் இல்லாததால் தற்போது விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

4R-AND, 4R-ANE மற்றும் 4R-ANF விமானங்கள் மற்றும் 188 விமான பயணிகளை கொண்டு செல்ல முடியும். அத்துடன், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் உதிரி பாகங்கள் இன்றி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles