NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு அமைச்சரிடம் இருந்து கண்டனம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஸ்ரீலங்கன் விமான சேவையை முறையாக நடத்தாவிட்டால், ஏனைய விமான சேவைகளை இலங்கையில் கொண்டு நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஏற்பட்ட விமான சேவையில் தாமதம் காரணமாக சுமார் 6 மில்லியன் டொலர்கள் மேலதிகமாக செலவிடப்பட்டதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டினார்.

Share:

Related Articles