NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய இணைப்பாளராக டி.வி. சானக நியமனம்..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய இணைப்பாளராக டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழுக் கூட்டத்திலேயே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த ரோஹித அபேகுணவர்தன அந்தப் பதவியில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய கிராமிய மற்றும் பிரதேச தலைவர்களை நியமிப்பதற்கான அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles