ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி வழிபட முடியும்.
நாடு முழுவதிலுமிருந்து கண்டிக்கு வருகை தரும் யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை திருத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக ஸ்ரீ தலதா மாளிகை அறிவித்துள்ளது.