NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹக்கப்படஸ் வெடிப்பொருள் வெடித்ததில் 3 பாடசாலை மாணவர்கள் காயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கம்பளை – மாவத்தறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மூன்று மாணவர்கள் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மைதானத்தில் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் ஹக்கப்படஸ் எனப்படும் வெடிப்பொருள் வெடித்தமையால் காயம் ஏற்பட்ட நிலையில், இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த மூன்று மாணவர்களும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களே காயமடைந்துள்ளனர்.

பாடசாலை வேளையில், இந்த மூன்று மாணவர்களும் வகுப்பறையை விட்டு வெளியே வந்தபோது பந்து போன்ற ஒன்றைக் கண்டு உதைத்ததில் அது வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles