ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோயா நகருக்கு அருகில் நேற்று அதிவேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் மூன்று பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி முச்சக்கர வண்டியின் சாரதி அதிக மதுபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதுள்ளதுடன் விபத்து தொடர்பில் பஸ் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.