NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹலால் உணவை கண்டுபிடிப்பதில் சிரமம் – தங்களுக்கான உணவை தாமே சமைத்து சாப்பிடும் ஆப்கான் வீரர்கள்!

T20 உலகக் கோப்பை 2024: ஆப்கானிஸ்தான் வீரர்கள் பார்படாஸில் ஹலால் உணவைக் கண்டுபிடிக்க போராடிவரும் நிலையில், தங்கள் உணவைத் தாங்களே சமைக்க வேண்டிய கட்டாயத்திற்குட்பட்டுள்ளனர்.

வீரர்கள் நகரத்தில் உள்ள உள்ளூர் மக்களிடமிருந்து ஹலால் உணவை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக உள்ளனர். எனினும், அவறடறை பெற்றுக்கொள்வது அது மிகவும் கடினமாக உள்ளது.

2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு தயாராகி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பார்படாஸில் ஒரு வினோதமான சிக்கலை எதிர்கொண்டுள்ளமை தற்பொழுது பேசுபொருளாகியுள்ளது.

ஸ்போர்ட்ஸ் டாக் படி, வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் குழு ஹோட்டலில் ஹலால் உணவைக் கண்டுபிடிக்க சிரமப்படுவதால், தங்கள் உணவைத் தாங்களே சமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அணி விளையாடிய செயின்ட் லூசியாவில் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் பார்படாஸில் விஷயங்கள் அவ்வளவு எளிதாக இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles