NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹல்துமுல்ல நகரில் விபத்து..!

கொழும்பில்  இருந்து கண்ணாடி ஏற்றி வந்த லொறி ஒன்று  ஹல்துமுல்ல  பகுதியிலுள்ள ஹட்வெயார்களுக்கு கண்ணாடிகள்    இறக்கிக் கொண்டு  இருக்கும் போது 35 வயதுடைய    நபர்    மீது  கண்ணாடிகள்  சரிந்து     விழுந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

பலத்த  காயங்களுடன் இராணுவ  வீரர்கள் உதவியுடன்  மீட்டெடுத்து அவரை 1990 காவு வண்டியினுடாக ஹல்துமுல்ல   வைத்திய சாலைக்கு  கொண்டு  செல்லப்பட்ட  பின் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் சிகிச்சை  பலனின்றி குறித்த நபர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles