அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் பரவிய காட்டுத்தீயினால் உயிரிழந்தேர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 93 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காட்டுத்தீயைக் கையாள்வது குறித்து விசாரணையைத் ஆரம்பிப்பதாக ஹவாயின் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்ததுள்ளதுடன், லஹைனாவில் வசிப்பவர்கள் முதன்முறையாக நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்டதால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.