NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹிக்கடுவை கடற்பரப்பில் மூழ்கிய ஐவர் பத்திரமாக மீட்பு!

ஹிக்கடுவை – நரிகம சுற்றுலா கடற்கரையில் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு சிறுவர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் ஐவர் பொலிஸ் உயிர்காப்புப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு பெண் மீட்கப்பட்டதாகவும், அவர்கள் ரஷ்ய மற்றும் கொலம்பிய பிரஜைகள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த குழுவினர் இன்று கடலில் நீராடிய நிலையில், அவர்கள் கடலலையில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் மற்றும் 7 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உடனடியாக தலையிட்டு குழுவினரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

மீட்கப்பட்டவர்களில் 12, 09 மற்றும் 04 வயதுடைய குழந்தைகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles