பண்டாரவளை பெரேரா மாவத்தையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து,
ஹெரோயின் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
320 ஹெரோயின் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வெலிமடை அம்பகஸ்தோவ பிரதேசத்தில் வசிக்கும் பாரிய ஹெரோயின் வியாபாரி ஒருவரை பண்டாரவளை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரும் பொலிஸ் விசேட பணியகமும் இணைந்து கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்டுள்ளவரை இன்று பண்டாரவளை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.