(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 16 வயது சிறுமி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் நேற்று (22) கைது செய்துள்ளனர்.
யாழ்.பருத்திமுகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புலோலி பகுதியில் நேற்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 5 கிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுமி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.