NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஹோமாகமை மக்களுக்கு முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஹோமாகமவை அண்மித்த குடியிருப்பாளர்கள்கள் முகக்கவசம் அணியுமாறு கொழும்பு அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

ஹோமாகம கைத்தொழில் வலயத்திற்குட்பட்ட தொழிற்சாலை ஒன்றிலுள்ள இரசாயன களஞ்சியசாலை ஒன்றில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறுகளை குறைப்பதற்காகவே இந்த விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles