NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அங்கொடையில் வீட்டில் நடத்தப்பட்டுவந்த பாரிய சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அங்கொடை – தெல்கஹவத்தையில் பகுதியில் உள்ள சொகுசு வீடொன்றில் ஒருவரால் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பிரபல வர்த்தகர்கள் உட்பட 15 பேரை சந்தேகத்தில் கைது செய்த பொலிஸார், ஒரு இலட்சம் ரூபா பந்தயத் தொகையையும் கைப்பற்றியுள்ளனர்.

தெல்கஹவத்தையில் இரண்டு மாடி வீடொன்றில் உள்ள குறித்த நபர் பல வருடங்களாக இந்த சூதாட்ட நிலையத்தை நடத்தி வருவதாக அங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

20 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றிவளைத்து சூதாட்டத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

Share:

Related Articles