NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் O/L பரீட்சை!

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை, நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் தமிழ் மாணவர்களுக்கு பாடசாலைக்கு வருகை தருவதில் சிரமம் ஏற்படும் என்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஊவா மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் ஊவா மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Related Articles