நெடுந்தாரகை படகு சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும் பணிக்கு திரும்பவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நெடுந்தாரகை படகு திருத்தப்பணிகளுக்காக திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு திருத்தப் பணிகளும் ஆரம்பமாகி இருந்தன. இவை முடிவுற்று அடுத்த மாதம் படகு பணிக்குத் திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நெடுந்தீவுக்கான படகுப் போக்குவரத்து மார்க்கங்களில் பிரதானமாக நெடுந்தாரகையும் ஒன்றாகக் காணப்படுகிறது.
மேலும், நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையை குமுதினி மற்றும் வடதாரகை என்பன வழங்கி வருகின்றன. மேலும் நெடுந்தாரகைப் படகு சேவைக்குத் திரும்பும் பொழுது வடதாரகை சோதனை நடவடிக்கைக்காக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.