அடுத்த மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி நிர்வாகத்தின் ஊடாக மறுசீரமைப்பிற்கான குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி எதிர்காலத்தில், 1 – 5 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் தொடக்கப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும். அத்துடன் 6 – 10 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் இளநிலைப் பாடசாலைகளாகவும், 10 – 13 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் மூத்த மேல்நிலைப் பாடசாலைகளாகவும் வகைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.