NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அண்ணன் திட்டியதால் 14 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு…!

காலி பட்டபொல, தெல்கஹபெத்த பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் நேற்றிரவு (26) தனது வீட்டிற்குள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

பட்டபொல கல்யாணதிஸ்ஸ கல்லூரியில் 09ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவனின் தாயார் வெளிநாட்டில் உள்ள நிலையில், அவர் தனது தந்தை மற்றும் மூத்த சகோதரருடன் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்ணன் திட்டியதால் மனமுடைந்த மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார்.

குறித்த சிறுவனை மீட்டு உடனடியாக பட்டபொல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles