மன்னார் விடத்தல் தீவு பிரதேசத்தில் காற்றாலை மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் மேற்கொண்ட தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளன.
சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் சீராக்கல் மனுவொன்றை சமர்ப்பித்து, குறித்த திட்டம் வாபஸ் பெறப்படுவதாக இந்திய அதானி நிறுவனம் இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.