(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
சமூக ஊடகங்கள் ஊடாக பல நிதி மோசடி சம்பவங்கள் குறித்து தகவல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தனது தனிப்பட்ட தகவல்களை வேறொரு தரப்பினருக்கு வழங்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
எந்த சூழ்நிலையிலும் தனிப்பட்ட தகவல்களை, குறிப்பாக தேசிய அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண், ஓட்டுநர் உரிம எண், கடவுச்சீட்டு புகைப்படம், குடியிருப்பு முகவரி, குடும்பத் தகவல், கணக்குத் தகவல், வங்கிக் கணக்குத் தகவல், குறிப்பாக வங்கிக் கணக்குகளுக்கான ஒருமுறை பயன்படுத்தப்படும் OTP இலக்கம் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் தெரியாத எந்த தரப்பினருக்கும் வழங்க வேண்டாமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.