NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக விலையில் அரிசி விற்றால் தண்டப் பணமாக ஒரு இலட்சம்…!

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை விட அதிகரித்த விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், அவ்வாறானவர்கள் தொடர்பில் 1977 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என்று அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரசாங்கமானது வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி கிலோ ஒன்று 220 ரூபாவுக்கும், கீரி சம்பா ஒரு கிலோ 260 ரூபாவுக்கும், சம்பா ஒரு கிலோ 230 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ 210 ரூபாவுக்கும் விற்பனை செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு விலை களை நிர்ணயித்துள்ளது.

கட்டுப்பாட்டு விலையை விட அதிகரித்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அந்த அதிகார சபை, ஒரு லட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles