NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக வெப்பம் காரணமாக இருவர் உயிரிழப்பு!

இந்நாட்களில் நிலவிவரும் அதிக வெப்பம் காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தாண்டு விழாவொன்றில், கயிறு இழுத்தல் போட்டியின் போது அதிக களைப்பு காரணமாக, தலையில் குளிர்ந்த நீரை ஊற்றியமையால், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் தனது வயலில் களைப் பிடுங்க சென்றிருந்த நிலையில், அதிக வெப்பம் காரணமாக குளித்துவிட்டு திரும்பும் போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இருவரும் 34 மற்றும் 38 வயதுக்குட்பட்டவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு மரணங்கள் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட வெப்ப அதிர்ச்சியால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share:

Related Articles