இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையானது, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை கடந்துள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் தரவுகளின் அடிப்படையில், 2023இல் இதுவரை 74,000க்கும் மேற்பட்ட டெங்கு நோய் தோற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் பதிவான தோற்றாளர்களின் எண்ணிக்கை 68,280 ஆகும்.
இந்த ஆண்டில் நவம்பர் 25ஆம் திகதி வரை 74,804 தோற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அதிக எண்ணிக்கையாக கொழும்பு மாவட்டத்தில் 15,837 பேர் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் மட்டும் அதிகபட்சமாக 35,337 பேர் டெங்கு தொற்றாளர்களாக இந்த ஆண்டு இனங்காணப்பட்டுள்ளார்.
தற்போது மழைக்காலத்தில் டெங்கு பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் மக்கள் தமது சுற்றுப்புறச் சூழலை தூய்மையாக வைத்திருக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.