NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இரண்டின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் கடலையின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 540 ரூபாவாகும்.

மேலும், பாசிப்பயறு ஒரு கிலோகிராம் விலை 77 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

இதுவேளை பால்மா 400 கிராமின் விலையையும் லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

Share:

Related Articles