NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டு 350 ரூபாவுக்கும், கோதுமை மா 5 ரூபாவால் குறைப்பட்டு 190 ரூபாவுக்கும் வெள்ளை கௌபீ 110 ரூபாவால் குறைப்பட்டு 990 ரூபாவுக்கும் சிவப்பு கௌபீ 45 ரூபாவால் குறைக்கப்பட்டு 950 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 780 ரூபாவுக்கும், நெத்தலி 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 930 ரூபாவுக்கும், கடலைப் பருப்பு 15 ரூபாவால் குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த அத்தியாவசியப் பொருட்களின் குறைக்கப்பட்ட விலையை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (06) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென அந்த நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Share:

Related Articles