NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அத்வானிக்கு திடீர் உடல் நலக்குறைவு.

இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜனதா மூத்த தலைவருமான எல்.கே. அத்வானிக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனைத்தொடர்ந்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக, அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை அறிக்கை ஒன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக துறையை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share:

Related Articles