NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு அமையும் – ஜனாதிபதி!

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகி சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னரே புதிய அரசமைப்பை இயற்றுவதற்குரிய பணி குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசமைப்பு அமையும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டில் இதுவரை இயற்றப்பட்டுள்ள அரசமைப்பு தொடர்பில் மக்களின் அனுமதி பெறப்படவில்லை என்றும் சோல்பறி அரசமைப்பு, 1972 அரசமைப்பு மற்றும் 1978 அரசமைப்பு என்பன மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்தோடு, மக்களுக்குரிய அடிப்படை சட்டங்களே அரசமைப்பாகும் எனவும், எனவே நாம் நிச்சயம் மக்களிடம் அனுமதி கோருவோம் எனவும் இது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புதிய அரசமைப்பை இயற்றும்போது 2015 இல் முன்னெடுக்கப்பட்ட அரசமைப்பு பணியில் உள்ள யோசனைகள் கருத்திற்கொள்ளப்படும் என்றும், புதிதாக யோசனைகள் உள்வாங்கப்படுவதோடு கோட்டாபய ஆட்சி காலத்திலும் குழுவொன்று அமைக்கப்பட்டதாகவும், அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles