தீபாவளி, வெற்றியின் அடையாளமாக உலக வாழ் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
“தீபாவளி” என்ற வார்த்தையின் அர்த்தம் விளக்குகளின் வரிசைகள்” எனக் கூறப்படுகின்றது.
தீபம் என்றால் விளக்கு ஆவளி என்றால் வரிசை தீபங்களை வரிசையாக ஏற்றி ஒளிமயமான இறைவனை வழிபடும் புண்ணிய தினமே தீபாவளியாகும்.
தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் அமாவாசை முன்தினம் நரக சதுர்த்தி அன்று கொண்டாப்படுகின்றது.
வீடுகளை ஒளிரச் செய்வதற்கும் இருளை அகற்றுவதற்கும் எண்ணெய் விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.
தீபாவளி கலாச்சார மற்றும் மத முக்கியத்துவம் வாய்ந்தது, மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் ஆன்மீக புதுப்பித்தலின் உணர்வை வளர்க்கிறது.
நரகாசுரனை வதம் செய்து அஞ்ஞான இருளகற்றி மெய்ஞான ஒளியை உள்ளங்களிலும் இல்லங்களிலும் மலரச் செய்த இந்நாளை மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறி கொண்டாடுகினறனர்
காத்தல் கடவுளான மகா விஷ்ணு அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதற்காக யுகங்கள் தோறும் அவதார புருஷராக பூமியில் ஜனனித்ததாக வரலாறு கூறுகின்றது.
துவாபரயுகத்தில் கொடுங்கோலோச்சிய கம்சன், நரகாசுரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்வதற்காக பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் ஆயர் குடியில் கிருஷ்ணனாய் அவதரித்தார்.
பாண்டவர்களின் தோழராய் பார்த்திபனின் சாரதியாய் குருசேத்திரத்தில் மகாபாரதப் போரை வழிநடத்திய கண்ணபிரான் அன்று தர்மத்தை நிலைநாட்டினார்.
வரங்கள் பல பெற்று மக்களை துன்புறுத்திய நரகாசுரனையும் கிருஷ்ண பரமாத்மா சம்ஹாரம் செய்து மக்களுக்கு வாழ்வளித்தார.
நரகாசுரனுக்கு அஞ்ஞானம் அகன்று மெய்ஞ்ஞானம் கைகூடியதை நினைவுகூரும் நோக்கில் தீபத்திருநாளன்று இல்லங்களும் கோவில்களும் அகல்விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றன.
உள்ளொளி ஏற்பட்டு நான் எனும் உணர்வை கடப்பதன் மூலமாகவே ஆயிரங்கோடி ஜோதி சொரூபமான பரப்பிரம்மத்தை அடைய முடியும் என்ற தத்துவத்தையும் அகல்விளக்கு வழிபாடு உணர்த்துகின்றது.
வாழ்வில் ஒளிதரக்கூடிய பண்டிகையான தீபாவளியை இந்துக்கள் மாத்திரமன்றி பிற மதத்தவர்களும் கொண்டாடுகின்றனர்.
இந்த நிலையில இன்று உலகலாவிய ரீதியில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் தமிழ் எப்.எம் இன் தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்…