NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமரகீர்த்தி அத்துகோரல எம்.பி கொலைச் சம்பவம் 37 பிரதிவாதிகளுக்கு பிணை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலைச் சம்பவம் தொடர்பில் 37 பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கம்பஹா நீதிமன்றத்தின் மூவரடங்கிய சபையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரள கடந்த வருடம் மே மாதம் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்.

காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு அருகில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலை நாட்டில் வன்முறையை தோற்றுவித்ததோடு, அலரிமாலிகையில் இருந்து பொலன்னறுவையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த அவர் நிட்டம்புவ நகர மையத்தில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

இதன்போது அமரகீர்த்தி அத்துகோரளவின் தனிப்பட்ட பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஜெயந்த குணவர்தனவும் சம்பவத்தில் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles